கழிவறைக்கு ஐடியா தந்தால் ரூ.26லட்சம் பரிசு

ஸ்மார்ட்டாக கழிவறை கட்ட உங்களிடம் ஐடியா இருக்கிறதா? ஆம் என்றால், நாசாவின் 26 லட்சரூபாய் பரிசு உங்களுக்குத்தான்.கழிவறை கட்ட பரிசா?வரும் 2024ம் ஆண்டு நிலவுக்கு முதன் முதலில் ஒரு பெண் விஞ்ஞானியை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. மிஷன் ஆர்ட்டிமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பல்வேறு புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் விஞ்ஞானிகள் பயணிக்கும்போது, பூமியில் இருப்பதைப்போலவே கழிப்பறைகளை பயன்படுத்த வசதிகளை ஏற்படுத்தித்தரும் முனைப்பில் ஆராய்ச்சிகளை நாசா மேற்கொண்டு வருகிறது… ஏற்கனவே விண்வெளி ஆய்வு நிலையத்தில் புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில் பயன்படுத்தப்படும் கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால் நிலவின் பரப்பில் உபயோகப்படும் அளவிற்கு அவை பயன்படாது. அதாவது நிலவில் ஒரு கிலோவை உந்தித்தள்ள 10 கிலோ உந்து விசை தேவை…. எனவே ஏற்கனவே இருக்கும் விண்வெளி கழிப்பறைகளை நிலவில் பயன்படுத்தினால் அதிகளவு ஆற்றல் தேவைப்படும் . எனவே, மனிதனை சந்திரனுக்கு கொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ் லேண்டர்களில் பயன்படுத்த மைக்ரோ கிராவிட்டி மற்றும் நிலவு ஈர்ப்பு ஆகிய இரண்டிற்கும் பொருந்தக்கூடிய வகையில் விண்வெளி கழிப்பறை வடிவமைக்கப்பட வேண்டும் என்று நாசா கூறியுள்ளது. இதற்காகவே உலக விஞ்ஞானிகளின் பங்களிப்பை நாடிய நாசா, மேற்சொன்ன வசதிகள் மற்றும் சிறிய அளவிலான கழிப்பறைகளை கண்டறிபவர்களுக்கு சுமார் 26 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.18 வயதானவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தனிநபராகவோ அல்லது ஓர் குழுவாகவோ பங்கேற்கலாம்… 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிகாட்டுதலோடு இந்த போட்டியில் பங்கேற்கலாம்… வரும் ஆகஸ்ட் 17 தேதி வரை இந்த புதிய கழிவறைக்கான யோசனைகள் மற்றும் திட்டங்களை நாசா இணையதளத்தில் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version