இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்

கொரோனா தொற்றால் உயிரிழந்த இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் தடகள் வீரர் மில்கா சிங்கிற்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால், மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மில்கா சிங் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11:30 மணிக்கு காலமானார்.

மில்கா சிங் மறைவு தனது இயத்தை கனக்க வைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது போராட்ட குணம் தலைமுறை இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மில்கா சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாடு இழந்துவிட்டதாக பிரதமர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version