ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்தியா தொடர்ந்து முதலிடம்

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைபற்றியதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 116 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

108 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், ஒரு புள்ளி வித்தியாசத்தில் 107 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 3 வது இடத்திலும் உள்ளன. அதேபோல் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியா 101 புள்ளிகளுடன் 5 இடத்தில் உள்ளது.

Exit mobile version