ஐசிசி தரவரிசை: விராத் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை  நேற்று வெளியிட்டது. 

இதில் டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தொடர்ந்து  நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். புஜாரா 3வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.. இந்திய வீரர்களான ரவீந்திர ஜடேஜா (794 புள்ளி) 5வது இடத்தில் நீடிக்கிறார். அஷ்வின் ஒரு இடம் பின்தங்கி 10வது இடத்தில் உள்ளார். ஜஸ்பிரித் பூம்ரா 16வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அடுத்த இடங்களில் உள்ளன. பந்துவீச்சாளர்களுக்கான ரேங்க்கிங்கில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (ஆஸி.) 878 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார். 

Exit mobile version