விதிமுறை உருவாக்குவதில் தடுமாறும் ஐசிசி… கடுப்பாகும் ரசிகர்கள்…

கிரிக்கெட் உலகக்கோப்பையை விட, ஏன் கால்பந்து உலகக்கோப்பை சிறந்தது என்பதற்கு ஐசிசி விதிக்கும் விதிமுறையே ஒரு காரணம் என்று சொல்லாம். கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் பிரபலமடைந்தாலும் ஐசிசி போட்டி விதிமுறைகளை உருவாக்குவதில் தடுமாறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். கிரிக்கெட் போட்டியில் நடைபெறும் சில தவறான முடிவுகளால், ஆட்டத்தின் போக்கு மாறி, ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்துகிறது. அண்மையில் நடந்து முடிந்த கிரிக்கெட் உலககோப்பையிலும் அது தொடந்துள்ளது.

Umpire’s call

LBW DRS review செய்யும்போது நாம் Umpire’s call என்ற விஷயம் கேள்விப்பட்டது உண்டு. LBW அவுட், DRS review செய்யும்போது அது Umpire’s call என்று வந்தால் கள நடுவர் கொடுத்த முடிவே இறுதியானதாக இருக்கும். அதாவது DRS review-ல் 50 சதவீதத்திற்கு மேல் பந்து ஸ்டெம்ப் மீது பட்டுயிருந்தால் மட்டுமே அவுட் வழங்கப்படும். இதற்கு இன்றும் எதிர்ப்பு உண்டு. பந்து ஸ்டெம்ப் மீது பட்டாலே அவுட் தான் வழங்க வேண்டும் என்கிறார்கள் கிரிகெட் வல்லுநர்கள்.

DLS Method

போட்டியில் மழை குறுக்கிடும் போது பயன்படுத்தப்படும் DLS Method இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. இது பொதுவாக முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே சாதமாக உள்ளது. இந்த விதிமுறை பல போட்டிகளில் பல அணிகளை பலி வாங்கியுள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி மழை குறுக்கீடு வரை நல்ல நிலையில் இருந்தாலும், மழைக்கு பிறகு DLS Method விதிமுறைப்படி மாற்றியமைக்கப்படும் இலக்கை அடையமுடியாமல் போவதும் உண்டு.

 

Super Over

ஆட்டம் tie-ல் முடியும் போது, அமலில் வரும் Super Over-வும் தற்போது ரசிகர் மத்தியில் தோல்வி அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு நேற்று நடந்த முடிந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி சான்று. நேற்று நடந்த போட்டியில் Super Over-வும் tie-ல் முடிந்ததால், அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதியை, கிரிக்கெட்டை உண்மையாக நேசிப்பவர்கள், விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பவுண்டரிகள் அடித்ததை மட்டுமே அடிப்படையாக கொண்டு முடிவு செய்வதா? என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே போல், நேற்று நடந்த போட்டியில் overthrow சர்ச்சையும் நடந்தது. கடைசி ஒவரில் நியூசிலாந்து வீரர் கப்தில் வீசிய throw பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பவுண்டரிக்கு சென்றது. விதிமுறை படி பந்து பேட்டில் பட்டு பவுண்டரி சென்றதால் 4 ரன்கள் மட்டுமே தந்திருக்க வேண்டும். ஆனால் கள நடுவர்கள் 6 ரன்கள் தந்தனர். நடுவரின் இந்த தவறான முடிவால் நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.

 

2019 உலகக்கோப்பை தொடரில் தான் அதிக தவறுகள்

இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கள நடுவர்கள் அதிக தவறுகள் செய்தனர். இதனால் பல போட்டிகளின் முடிவுகள் மாறிப்போனது. மேற்கு இந்திய தீவு – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் கெயில் ஸ்டார்க் பந்தில் lbw ஆனார். ஆனால் அதற்கு முன் ஸ்டார்க் வீசிய பந்து No Ball- என போட்டி முடிந்த பிறகு தெரியவந்தது. அது No Ball என அறிவிக்கப்பட்டிருந்தால், கெயில் அவுட் ஆன பந்து Free Hit-ஆக மாறியிருக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் விராட் கோஹ்லி அமீர் வீசிய பந்தில் சப்ராஸ் அகமதுவிடம் கேட்ச் ஆனார். ஆனால் அது replay-வில் பந்து பேட்டில் படவேவில்லை என தெரியவந்தது.

இந்தியா- மேற்கு இந்திய தீவு அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா ரோச் வீசிய பந்தில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் ஆனார். ஆனால் அது replay-வில் பந்து பேட்டில் படவேவில்லை என தெரியவந்தது.

இந்தியா – நியூசிலாந்து மோதிய அரையிறுதி போட்டியில், விதிமுறைகள் மீறி, பவர் பிளேயின் போது 6 ஃபீல்டர்கள் வட்டத்திற்கு வெளியே நியூசிலாந்து அணி வீரர்கள் இருந்தனர். கள நடுவர்கள் விதி மீறியதை கவனிக்கத் தவறியதாக கேள்வி எழுந்தது. இதனை நடுவர்கள் எச்சரிக்கை செய்திருந்தால் ஒருவேளை பந்தை த்ரோ செய்து ரன் அவுட் செய்த குப்தில் வேறு இடத்தில் பீல்டிங் செய்திருக்கலாம். தோனி அவுட் ஆகி இருக்க மாட்டார்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் கம்மின்ஸ் வீசிய பந்து ராய் அருகே சென்றது. இதை விக்கெட் கீப்பர் கேரி கேட்ச் பிடிக்க, அம்பயரிடம் அவுட் கேட்கப்பட்டது. இதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட குமார் தர்மசேனா, அவுட் என கையை உயர்த்தினார். இதன் பின் ரீப்ளேவில் பார்த்த போது பந்து ராயின் பேட்டிலோ அல்லது கிளவுசிலோ படாதாதது தெளிவாக தெரிந்தது.

இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் சற்று கோபத்தில் ஆழ்ந்தனர். இது போன்று தவறுகளால் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரசியம் குறைந்துவிட்டதாக கிரிக்கெட் வல்லுநர் தெரிவித்துள்ளனர். விதிமுறைகள் சரியாக ஐசிசி விதிக்காததால் இதுபோன்ற தவறுகள் கிரிக்கெட்டில் நடைபெறுகிறது. வரும் காலத்தில் விதிமுறைகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Exit mobile version