தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளராக சந்திரமோகன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் முதன்மை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளராக இருந்த தீரஜ் குமார், தற்போது பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலாளராக இருந்த குமார் ஜெயந்த், ஓவர்சீஸ் மேன்பவர் காப்பரேஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திக்கிற்கு கூடுதல் பொறுப்பாக எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.