கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் அம்மா ஐஏஎஸ் அகாடமியால் அதிகளவிலான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இதற்கான பயிற்சி அளிக்க ஏராளமான மையங்கள் இருந்தாலும் அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகம் என்பதால் ஐ.ஏ.எஸ் கனவு என்பது ஏழை மாணவ, மாணவிகளுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இந்தநிலையில், கொங்கு பகுதி மாணவர்களின் ஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர முயற்சியால், கோவை ஆர்.எஸ். புரத்தில் கடந்த மார்ச் 3ம் தேதி அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி துவங்கப்பட்டது. 2019 தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியில் 104 மாணவர்கள் கல்வி கற்று யூ.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வை எழுதியுள்ளதாக கூறுகிறார் பயிற்சியாளர் ஆதிக் பாபு.
வருகிற 2020ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான ஒரு வருட பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் www.Amma IAS.acatemy என்ற இணையப்பக்கம் மூலம் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய ஜூன் 20ம் தேதியே கடைசி என்பதால் விரைவாக விண்ணப்பத்து மாணவர்கள் பயனடையும்படி அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி மைய நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அம்மா ஐஏஎஸ் அகடமியில் டிஜிட்டல் லைப்ரரி, படிக்கும் அறைகள் மற்றும் குளிர்சாதன வகுப்பறைகள் ஆகிய வசதிகள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ளன. கொங்கு பகுதியைச் சேர்ந்த நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களின் ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கும் சோலையாக அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி செயல்பட்டு வருகிறது என்றால் அது மிகையல்ல…