தான் இன்னும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவும், அடுத்த 5 ஆண்டுகள் பாஜக – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் நிலையான ஆட்சியை தர உள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸின் அஜித்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சராக அண்மையில், பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டதை அடுத்து, துணை முதலமைச்சராக அஜித்பவார் இதனால் அக்கட்சியின் தலைவர் சரத்பவார், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி அஜித்பவாரை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த அஜித் பவார், மகாராஷ்டிரா மக்கள் நலனுக்காக தொடர்ந்து உழைக்கப்போவதாக கூறியுள்ளார்.