மக்களின் அமோக ஆதரவோடு வெற்றி பெறுவேன்: ஜோதி பாலகிருஷ்ணா

அதிமுக கூட்டணி பலமான கூட்டணி என்றும், மக்களின் அமோக ஆதரவோடு வெற்றி பெறுவேன் என ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தை ஆட்சி செய்து வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆசியுடன் தான் போட்டியிடுவதாக கூறினார்.

அதிமுக கூட்டணி பலமான கூட்டணி என்றும் மக்களின் அமோக ஆதரவோடு வெற்றி பெறுவேன் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

Exit mobile version