சட்டப்பேரவையில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்பதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.
குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 23ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, புதிய முதலமைச்சராக பாஜகவின் எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றார். வரும் 31ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஆளுநர் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், 29ம் தேதியே பெரும்பான்மையை நிரூபிக்க போவதாக எடியூரப்பா கூறியுள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, சட்டப்பேரவையில் 100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறினார். முந்தைய அரசு தயாரித்த நிதி மசோதாவை எந்த திருத்தமும் இல்லாமல் திங்களன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.