அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் : டிரம்ப்

அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில் அதிபர் உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில் வரும் 29-ந் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற வரும்படி, டிரம்புக்கு பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி, அழைப்பு விடுத்த அடுத்த நாளே தனது அழைப்பை திரும்பப் பெற்றார்.

அரசின் துறைகள் 4 வாரங்களுக்கும் மேலாக முடங்கி இருப்பதால், முதலில் அதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும், பின்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தலாம் என்றும் பெலோசி தெரிவித்தார். இந்த நிலையில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை, நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version