பேச்சுவார்த்தைக்காக பிரதமர் மோடியை சந்திக்கத் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பிற நாடுகளில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு, பாகிஸ்தானை பயிற்சி இடமாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதை அனுமதிக்க முடியாது என்றார். பாகிஸ்தான் மக்களின் மனநிலை தற்போது மாறியிருப்பதாகவும், எந்த விவகாரம் தொடர்பாகவும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்று கூறிய இம்ரான் கான், இந்தியாவில் பொதுத் தேர்தல் நிறைவடைந்த பிறகு, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post