ஸ்டாலினை யார் என்றே எனக்கு தெரியாது : ஜான் எலியாசன்

திமுகவின் தலைவர் ஸ்டாலினை ஐ.நா.வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் புகழ்ந்து எழுதியதாக ஒரு தகவலை, திமுகவினர் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் ‘ஸ்டாலின் யார் என்றே தெரியாது என ஜான் எலியாசன் மறுப்புத்தெரிவித்த சம்பவம் திமுகவினரின் போலி விளம்பர உத்தியை தோலுரித்துள்ளது.

ஒரு பக்கம் கரீனா கபூர், மற்றொரு பக்கம் கத்ரினா கைப் ஆகியோரை சந்திக்காமலேயே, ஜோடியாக நிற்பது போன்று, சிவகார்த்திகேயனும், சூரியும் ஆளுயுர பேனரில் போஸ் கொடுக்கும் காட்சி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இடம்பெற்று பலரை சிரிக்க வைத்தது. அந்த காட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையே ஒரு அரிய வகை பொய்யை கட்டவிழ்த்துவிட்ட சம்பவம் பலரையும் நகைக்க வைத்திருக்கிறது.

ஐநாவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஜான் எலியாசன், தான் எழுதிய ” நான் வியந்த உலகத் தலைவர்கள்” என்ற புத்தகத்தில், மு.க.ஸ்டாலின் குறித்து குறிப்பிட்டு இருந்ததாக திமுகவினர் சமூக வலைதளங்களில் வண்டி, வண்டியாக புளுகியிருந்தனர். போதாததற்கு, ஆதாரப்பூர்வமாக விளக்குகிறேன் என்ற பெயரில், அந்த புத்தகத்தின் 372-வது பக்கத்தில் ஸ்டாலின் குறித்து ஜான் எலியாசன், தான் வியந்த அரசியல் ஆளுமைகளில் ஸ்டாலினும் ஒருவர் என்றும், அவரின் நீண்ட கால அரசியல் திட்டங்கள் குறித்த பேச்சுக்களை தானே தனிப்பட்ட முறையில் குறிப்பு எடுத்து வைத்து; பொக்கிஷமாக பாதுகாத்து வருவதாகவும் கூறியிருந்தாகவும் சொல்லி, திமுகவினர் சமூக வலைத்தளங்களில் விடாமல் முட்டுக்கொடுத்தனர்.

பொய்யில் கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கும் வகையில், ஐ.நா.அலுவலகத்தில் ஜான் எலியாசனுடன் ஸ்டாலின் இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டு இருந்தது. இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, ஜான் எலியாசனுடன் ஸ்டாலின் இருக்கும் புகைப்படங்களை, திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும் தனது இணையப் பக்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.

சும்மா விடுவார்களா நெட்டிசன்கள் ? சமூக வலைத்தளம் மூலமாகவே, சிலர் ஜான் எலியாசனை தொடர்பு கொண்டு, இதுபற்றிக் கேட்டுள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜான் எலியாசன், அது ஒரு புரளி என்றும், ஸ்டாலினுடன் புகைப்படத்தில் உள்ளது போன்ற ஒரு சந்திப்பு நிகழவே இல்லை என்றும், அதில் உள்ள பல விஷயங்கள் செயற்கையாக தயாரிக்கப்பட்டவையாக இருப்பதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் மறுப்புத்தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் துணைமுதலமைச்சர் என சொல்வது, குடியரசுதினம் மற்றும் சுதந்திரதின விழா தேதிகளை அடிக்கடி மேடைகளில் மாற்றி உளருவது, திமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை தவறாக சொல்லி மாட்டிக்கொள்வது…என தொடர் சர்ச்சைகளில் சிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், சந்திக்காத நபரை சந்தித்ததாக போலிப்புகைப்படத்துடன் செய்தி பரப்பி வருவது, சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் கேலிக்கூத்தாகியுள்ளது.

Exit mobile version