`நான் யாகம் செய்ததால் தான் கொரோனா தாக்கம் குறைந்தது’ – பூசாரி குபீர்

தர்மபுரி அருகே, தான் நடத்திய யாகத்தால் பத்து நாட்களில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பூசாரி ஒருவர் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து வெளி வர முடியாமல் உலக மக்கள் அனைவரும் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவர், வனப்பகுதியில் உள்ள பாறைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்தும், பொங்கலிட்டும் வழிபாடு செய்தார்.

 

மேலும் விறகுகளை எரித்து 50 கிலோ மிளகாய்களை கொண்டு யாகம் வளர்த்து வழிபட்டார். பின்னர் அருள் வந்து ஆடிய ராஜாராம், மாதா மாதம் வழிபாடு செய்தால் கொரோனாவின் தாக்கம் குறையும் எனவும் கூறியுள்ளார். தற்போதைய விஞ்ஞான உலகத்திலும் இது போன்ற வழிபாடுகள் நடத்தப்படுவது வியப்பை அளிப்பதாக, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்வது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வரும் இக்காலத்திலும், இது போன்ற வழிபாடுகள் இருக்கத்தான் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version