காஷ்மீரில் தீவிரவாதிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். லே பகுதியில் புதிய விமான முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீரில் வளர்ச்சி திட்டங்கள் தாமதமானதற்கு காங்கிரஸ் கட்சி தான் என்றார். தற்போது அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களை எதிர்காலத்தில் தாமே திறந்து வைக்கப்படலாம் என்று கூறினார். இதன்மூலம், மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமர் ஆவது நிச்சயம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.