இனி தமிழகத்துக்கு நான் வரப்போவதில்லை: நித்யானந்தா

தமக்கும் தமிழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இனி தமிழகத்துக்கு வரப்போவதில்லை எனவும் சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் தலைமறைவாகியுள்ள நித்யானந்தா, அவ்வப்போது சத்சங்கம் நடத்தும் வீடியோவை மட்டும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் அவர் வெளியிட்ட வீடியோவில், நீண்ட இழுபறிக்கு பின் கைலாசாவை  உருவாக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியான உறவுகள் தொடங்கியுள்ளது எனவும் கூறினார்.

தாம் இறந்தாலும், தமது உடல் பிடதி ஆசிரமத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், தமது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பதை உயில் எழுதி வைத்துள்ளதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version