வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்த கணவருக்கு மனைவி சரமாரி அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் ஈஸ்டர் ஏஞ்சல் என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதை தெரிந்து கொண்ட ஏஞ்சல், அவரை கையும் களவுமாக பிடித்து இருவரையும் சரமாரியாக தாக்கினார். துடைப்பம் மற்றும் செருப்பால் கணவரை அவர் அடித்தார். இதனால் வலி தாங்க முடியாத கோபால் அருகில் இருப்பவர்களிடம் தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சினார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.