ஆள் வைத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவன்!!

திருமணமாகி பிரிந்து வாழும் மனைவிக்கு கணவன் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சில காலங்களில், தன்னை விட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு அமேசான் டெலிவரி ஊழியர் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார் கணவர். இச்செயல் மூலம் அதிர்ந்த பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆபாசமாக பேசிய நபரை லாவகமாக பெண்ணின் வீட்டிற்கு வரவழைத்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கணவரே இந்த செயலுக்கு காரணம் என தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அப்பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். மனைவிக்கு கணவரே ஆள்வைத்து டார்ச்சர் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version