கர்ப்பமான மனைவிக்கு தானும் கர்ப்பமாக இருப்பத்தை போல் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜாரெட்-கெல்சி பிரேவர் என்ற தம்பதி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதில் ஜாரெட்டின் மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் குழந்தை பிறப்பதில் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தி ஓய்வு எடுக்க சொல்லி உள்ளனர். இந்நிலையில் சோகத்தில் இருந்த மனைவிக்கு surprise கொடுக்க கணவன் ஜாரெட் நினைத்துள்ளார். இதனை தொடர்ந்து புகைப்பட கலைஞர் ஜாரெட் – க்கு ஒரு idea கொடுத்துள்ளார்.
அதில் கணவன் கர்ப்பமாக இருப்பத்தை போல் அவரின் தொப்பையை காட்டி புகைப்படம் எடுத்து facebook பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் அவரின் மனைவியை கவர்ந்தது மட்டும் இல்லாமல் தற்போது சமூகவலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.