வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில், மனைவியை ஊதாங்கோலால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்…
வேலூர் மாவட்டம் பேர்ணம்பட்டு அடுத்த பத்திலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர்கள் யுவராஜ் மற்றும் சுப்புலட்சுமி தம்பதினர்… இவர்களுக்கு திருமணமாகி 9 மாதம் ஆன நிலையில் கணவன் மனைவியிடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம். கொத்தனாராக வேலை செய்யும் யுவராஜுக்கு குடிபழக்கம் இருக்கிறது…
நேற்று இரவு குடித்துவிட்டு பசியாக வந்த யுவராஜ், மனைவி சுப்புலட்சுமியிடம் சாப்பாடு வைக்க சொல்லியிருக்கிறார்… வீட்டிற்கு பொருட்கள் வாங்க பணம் இல்லை என்று கூறும் உங்களுக்கு குடிப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டுள்ளார்.
இதில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கடுமையான வாக்குவாதமாக மாறியது… ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மனைவி, செருப்பை எடுத்து கணவனை அடித்ததாக கூறப்படுகிறது… இதில் ஆத்திரமடைந்த யுவராஜ் அடுப்பங்கரையில் இருந்த ஊதங்கோலை எடுத்த தனது மனைவியின் தலையில் ஓங்கி அடிக்க, ரத்த வெள்ளத்தில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேர்ணாம்பட்டு போலீசார் சுப்புலட்சுமியின் உடலை மீட்டு உடல் கூர்வு ஆய்வுகாக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்…மேலும் மனைவியை கொலை செய்த யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்…
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்று கூறுவார்கள்… திருமணமான 9 மாதத்தில் கணவன் மனைவியை ஊதங்கோலால் அடித்து கொலை செய்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.