மனைவியை கொன்று சாக்குமூட்டையில் கட்டி குப்பையில் வீசிய கணவன்

மனைவியை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசிவிட்டு, காணவில்லை என்று புகார் கொடுத்து நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்

திண்டுக்கல் மாவட்டம், லந்தக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் அவரது மனைவி சூரியகுமாரி இவர்களுக்கு பரணி, ஜெனித் இரண்டு மகன்கள் இருகின்றனர்.

சிவசங்கரன் – சூரியகுமாரி இருவரும் வாடகை வீட்டிலியே பத்துக்கு மேற்பட்ட தையல் மிஷின்கள் கொண்டு ஆயத்த ஆடைகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்களிடம் 10கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் மனைவி சூரியகுமாரி கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் காணவில்லை என கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி சிவசங்கரன் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவுபடி தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட பகுதியில் சாக்குமூட்டையில் பாதி உடல் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் ஒரு பெண் உடல் கிடந்துள்ளது.

அந்த உடலை மீட்ட திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்து ஒருவாரத்திற்கு பிறகு உடலை அங்கேயே அனாதை பினமாக அடக்கம் செய்தனர்.

அந்த உடலில் இருந்த அணிகலன்களை கொண்டு கரூரில் மனைவியை காணவில்லை என்று கூறிய சிவசங்கரனிடம் விசாரித்ததில் அவர் தனது மனைவியின் உடல் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கணவர் சிவசங்கரன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் தாந்தோணிமலை காவல்துறையினர் சிவசங்கரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது.

அதாவது தனது மனைவி சூரியகுமாரி வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு இருந்ததாகவும்,அதை பலமுறை எச்சரித்தும் சூரியகுமாரி கேட்காமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் . அவரை கட்டையால் அடித்து கொன்றதாக ஒப்புகொண்டுள்ளார்.

உடலை மறைப்பதற்காக ஒரு சாக்குமூட்டையில் கட்டி அப்பகுதியில் உள்ள குப்பை மேட்டில் வீசியுள்ளார்.

இதன் பின்னர் சிவசங்கரனை கைது செய்த காவல்துறையினர் அவறை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version