மனைவி மது குடிக்கலைனு கணவன் விவாகரத்தா…!

பீகார் மாநிலம் பாட்னாவில் தனது மனைவி modern – ஆக மாறவில்லை என முத்தலாக் சொல்லி கணவன் விவகாரத்து செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்த இம்ரான் முஸ்தபா என்பருக்கும் பாத்திமாவிற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் இருவரும் குடியேறியுள்ளனர். இந்நிலையில் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையைக் கண்டு இம்ரான் முஸ்தபா அவரது மனைவியை modern ஆக மாற வற்புறுத்தியுள்ளார், குட்டையான ஆடையை அணிய சொல்லியும் , இரவு நேரங்களில் party – க்கு வரசொல்லியும் மற்றும் மது அருந்த சொல்லியும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனை மறுத்த பாத்திமாவை இம்ரான் முஸ்தபா அடித்து துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்திற்கு பிறகு பாத்திமாவை முத்தலாக் சொல்லி இம்ரான் முஸ்தபா விவாகரத்து செய்துள்ளார். இது குறித்து பீகார் மாநில காவல் நிலையத்தில் பாத்திமா வழக்கு தொடர்ந்தததை அடுத்து பாட்னா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version