கதறிய கணவன்; செவி சாய்க்காத மனைவி, மகள் – உயிரை பறித்த டிக்டாக் மோகம்!

திருப்பூரில், மனைவியும் மகளும் தன்னை விட்டு பிரிந்த சோகத்தில் வீடியோ மூலம் மரண வாக்குமூலம் தெரிவித்து தூக்கில் தொங்கிய ஒர்க்ஷாப் உரிமையாளரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… குருவிக் கூட்டிற்குள் குண்டு வைத்த டிக் டாக்-கின் அட்டூழியத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன்நகரை சேர்ந்தவர் 44 வயதான ரவி. இவருடைய மனைவி 35 வயதான கனகவள்ளி. இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் ரவி, இருசக்கர வாகன பழுதுபார்ப்பு மையம் ஒன்றை நடிடத்தி வந்தார். 19 வருடங்களாக ரம்மியமாக சென்ற ரவியின் குடும்பதில் டிக் டாக் என்ற ராட்சத அலை வீச தொடங்கியது… ரவியின் மனைவி மற்றும் மகள் இருவரும் டிக் டாக்கில் மூழ்க தொடங்கினர்…

அப்போது கனவள்ளியும் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த ஒருவரும் டிக் டாக்-கில் அறிமுகமாகி உள்ளனர். அது கள்ளத்தொடர்பாகவும் மாறி உள்ளது. அதேபோல் கனகவள்ளியின்16 வயது மகளும் டிக் டாக் வாயிலாக ஒருவரை காதலித்து துவங்கியுள்ளார். டிக்டாக் மூலம் தாயும், மகளும் தங்களுடைய காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஒரு அறையில் தாயும், மறு அறையில் மகளும் டிக் டாக்கில் தங்களுடைய காதலர்களுடன் இரவு பகலாக மூழ்கிக்கிடந்தனர். வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்துகொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்த ரவி, மனைவியையும் மகளையும் கூப்பிட்டு கண்டித்துள்ளார். தகாத உறவை விட்டுவிடும்படி மனைவியிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளார் ரவி. சூரம்பட்டி மைனர் காட்டிய ஆசைவார்த்தைகளில் வீழ்ந்த கனகவள்ளிக்கு இவையெல்லாம் கேட்கவில்லை. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி ரவியின் மனைவியும், மகளும் வீட்டு வாசலை தாண்டி… அழகான குடும்பம் என்ற குருவி கூட்டை கலைத்தனர்…

வீட்டை விட்டு வெளியேறிய தாயும், மகளும் அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ரவி புகார் அளித்தார்… ரவியுடன் சேர்ந்து வாழும்படி போலீசார் கனகவள்ளியை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் ரவியுடன் வர மறுத்ததுடன், அவரை மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக தெரிகிறது. இதனால் கடுமையான மனஉளைச்சலுடன் இருந்த ரவி… விரக்தியில் வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி தூக்கில் தொங்கினார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய மரண வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார் ரவி.

இந்த சம்பவம் தொடர்பாகவும், ரவி மரண வாக்குமூலம் என்று வெளியிட்ட வீடியோ மற்றும் அவருடைய சாவுக்கு காரணம் என்று கூறப்படும் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த 4 பேரிடமும் அனுப்பர்பாளையம் காவல்துறையினர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிக் டாக்கை முடக்கினாலும் அதன் மூலம் சீரழிந்த குடும்பங்களில் மரண ஓலங்கள், எதிரொலித்து கொண்டு தான் இருக்கிறது…

Exit mobile version