காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராமராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் ஒருபடி மேலே சென்று ராகுல் காந்தியை ராமராக சித்தரித்து பிகாரில் போஸ்டர்களை ஒட்டினர்.ராகுலை சிவ பக்தர் என காங்கிரஸ் கட்சியினர் கூறிவந்த நிலையில் தற்பொழுது இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் பாட்னா சிவில் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், பீகார் காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.