மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள புரெவி புயல், மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதனுடன் இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.