வேட்டையாடும் வெட்டுக்கிளிகள்!!- சமாளிக்க முடியாமல் திணரும் வடமாநில விவசாயிகள்!!

வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை.. வழக்கமாக வறட்சியான காலத்தில் இருந்து பசுமையான காலம் திரும்பும் போது இதன் இனப்பெருக்கம் உச்சகட்டத்தில் இருக்கும்.. வளமையான பசுமையான பூமியை பார்த்துவிட்டால், பல லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பெருகி பயிர்களை தின்று தீர்க்கும்…ஒருநாளைக்கு 150 கி,மீ, வரை சளைக்காமல் பயணித்தபடியே, தாவரங்களை வேட்டையாடும் வல்லமை கொண்டவை.. வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், அந்த காலத்தில் இந்த வெட்டுக்கிளிகளால் விளைச்சல் அற்றுப்போய், நாட்டில் பசியும் பஞ்சமும் கூட தாண்டவமாடி இருக்கிறது..

எத்தியோப்பியா மற்றும் சோமாளியாவில் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பவை வெட்டுக்கிளிகளே.. 20 ம் நூற்றாண்டு வரை இப்படி பெருங்கூட்டமாக படையெடுக்கும் அளவுக்கு பெருகியதில்லை என்கிறார்கள்.. அதன் பின்னரே இதன் பல்கிப்பெருகும் வீரியம் விரிவடைந்திருக்கிறது..வெட்டுக்கிளிகள் 3 மாதம் வரை உயிர்வாழ்பவை.. தன் வாழ்நாளில் 250 க்கும் மேற்பட்ட முட்டைகளை அவை இடுகின்றன.. ஆகவே ஆண்டுக்கு ஆண்டு வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை 250 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது…அண்டார்டிகா மற்றும் வட அமெரிக்காவில் மட்டும் தான் வெட்டுக்கிளிகள் இல்லை. மற்றபடி அனைத்து கண்டங்களிலும் வசிக்கின்றன.. பாகிஸ்தானுக்குள் இருந்து இந்தியாவுக்குள் வழக்கமாக ஜுலை அக்டோபரில் தான் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும்.. இந்த ஆண்டு ஏப்ரலிலேயே வந்துவிட்டன..

இதனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம்,பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் முழு வெற்றிபெற முடியவில்லை. ராஜஸ்தானில் இதுவரை 21,675 hectare பரப்பில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டு இருக்கிறது.. வெட்டுக்கிளிகளை எட்டுக்கால் பூச்சி, பறவைகள், பல்லிகள் மற்றும் நரிகள் சாப்பிடும் … ஆனால் அவற்றை ஒழிக்க இந்த இயற்கை வைத்தியம் போதாது.

வெட்டுக்கிளிகள் இரவில் ஓய்வெடுக்கும் பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என மத்திய அரசுக்கு விவசாய துறை அதிகாரிகள் பரிந்துரைசெய்துள்ளனர்.. விரைவில் டிரோன்கள் மூலமும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட உள்ளது.
டான்சானியாவில் இதுபோல விமானத்தில் மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை கொல்கிறார்கள்..

அனைத்திற்கும் மேல் இந்த வெட்டுக்கிளிகள் மனிதர்கள் சாப்பிட உகந்தவை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காலங்காலமாகவே வெட்டுக்கிளிகளை சாப்பிட்டு வருகிறார்கள்.. பாகிஸ்தான், சீனா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் கூட வெட்டுக்கிளிகள் உண்ணப்படுகின்றன.. குறிப்பாக சவூதி அரேபியாவில் விரும்பி உண்கிறார்கள். வெட்டுக்கிளிகள் பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டாலும் பெரும்பாலும் மசாலாவில் புரட்டி, வறுத்து உண்பதே பிரபலமாக இருக்கிறது..
இதை சில நாடுகளில் வான் எறாக்கள் என சொல்வதுண்டு.. இஸ்ரேல் உணவகங்களில் பலராலும் விரும்பி உண்ணப்படும் சுவை மிகு உணவு வெட்டுக்கிளி வறுவல்தான்.. வெட்டுக்கிளி இறைச்சியை சாக்லேட்டிலும் கலக்கிறார்கள்.ஆடு மாடு போன்றவற்றை ஒப்பிடும் போது, வெட்டுக்கிளிகளில் அதிக புரோட்டின் ,குறைந்த அளவு கொழுப்பு , மற்றும் potassium, sodium, phosphorus, calcium, magnesium, இரும்பு , ஸிங்க் ஆகியவையும் உள்ளன.

ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் வெட்டுக்கிளிகளை தேன் தொட்டு சாப்பிடுகிறார்கள்.. வெட்டுக்கிளிகளில் நோய் பரவும் என்பதற்கோ, மனிதர்களுக்கு ஆபத்தானது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை..அதை விரட்டி அடிப்பதை விட, பிடித்து வெளிநாடுகளுக்கு உணவுக்காக ஏற்றுமதி செய்யலாம் என ஒரு தரப்பினர் ஆலோசனை கூறுகிறார்கள்..

Exit mobile version