தேனி அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதால், நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன.
தேனி மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பகல் பொழுதில் வெயில்
சுட்டெரித்து வருகிறது. கடந்த காலங்களில் நிலவி வந்த வெப்ப நிலையை விட தற்போது 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான தேவாரம் சதுரங்கப்பாறை மெட்டு பகுதிகளில், இந்தாண்டின் முதல் காட்டுத் தீ பற்றியுள்ளது. விடிய விடிய கொழுந்து விட்டு எரிந்த காட்டுத் தீயினால் நூற்றுக்கணக்கான அரியவகை மரங்கள் எரிந்து நாசமாயின. இதுபோன்று மேலும் காட்டுத்தீ பற்றாமல் இருப்பதற்கு
வனத்துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று
அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.