வானில் பறந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நார்த் வேல்ஸ் பகுதியில் ஏங்கலிஸே என்ற பகுதியில் ஸ்டர்லிங் என்ற படை குருவிகள் அதிகம் உள்ளன. கடந்த செவ்வாய்கிழமை வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பறவைகள் திடீரென கொத்துக் கொத்தாக கிழே விழுந்து உயிரிழந்தன.தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் பறவை ஆய்வாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டதால் குருவிகள் இறந்திருக்கலாம் என அப்பகுதியினர் கூறி வருகின்றனர்.