துப்புரவுபணிக்கு மனிதர்களுக்கு பதில் ரோபோ : ஜெகதீஷ் ஹிர்மானி

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் சோதனை முயற்சியாக, ரோபோக்களை களமிறக்கி உள்ளதாக தேசிய துப்புரவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பாதாள சாக்கடை சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சோதனை அடிப்படையில் நாடு முழுவதும் கும்பகோணம் உள்ளிட்ட 10 இடங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக, தேசிய துப்புரவு பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் சோதனை அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டாக ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோபோக்களின் செயல்பாடுகளை ஜெகதீஷ் கிர்மானி ஆய்வு செய்தார்.

Exit mobile version