மனிதன் – யானை மோதலை தடுக்க தமிழக அரசு புதிய திட்டம்

கோவையில் தொலை உணர்வு கருவிகள் மூலம் மனிதன் – யானை மோதலை தடுக்க 7 கோடியே 25 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழக கிராமங்களில் மனிதன் – யானை மோதல்கள் அதிகரித்து வருகிறன. விவசாய நிலங்களை சேதமாவதுடன், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், வனப்பகுதியில் வசிக்கும் மனிதர்களின் வாழ்விட பகுதிகளில் யானைகள் நுழைவைதை கண்காணிக்கவும், செயற்கை நுண்ணறிவினைக் கொண்டு தொலைதூர கட்டுப்பாட்டு தெர்மல் கருவி மற்றும் கண்காணிப்பு படப்பிடிப்புக் கருவி, ரயில் பாதைகளில் நடமாடுவதைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முன்னெச்சரிக்கை அமைப்பு, கோவை வனக்கோட்டத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Exit mobile version