8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகாவிஷ்ணு சிலை திருவண்ணாமலைக்கு புறப்பட்டது

செஞ்சி , சேத்துப்பட்டு சாலையில் கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை பெங்களூரு செல்ல சேத்துபட்டு வழியாக திருவண்ணாமலைக்கு புறப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் , வந்தவாசி வட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து கடந்த 9-ஆம் தேதி பெங்களூருக்கு மகாவிஷ்ணு சிலை புறப்பட்டது. சுமார் 66 அடி நீளம், 26 அடி அகலம் கொண்ட ஒரே கல்லில் அமைந்த 420 டன் எடை கொண்ட இந்த பிரமாண்ட மகா விஷ்ணு சிலை, விழுப்புரம் மாவட்ட எல்லையான வெள்ளிமேடுபேட்டை வழியாக வரும் போது வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.

இந்தநிலையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே , செஞ்சி கோட்டை வழியாக செல்வதற்கு சிலையின் அகலத்தில் 2 அடி குறைக்கப்பட்டது. இதனால் சிலையின் வடிவமைப்பு தோற்றம் சிறிது மாறுப்பட்டது.

சிலையின் அகலத்தை குறைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் தொல்லியல்துறை கோட்டை வழியாக திருவண்ணாமலை செல்ல அனுமதி கிடைக்காததால் 8 நாட்களாக செஞ்சி-சேத்துப்பட்டு சாலையில் சிலை ஏற்றி வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டது.

அதிகாரிகளின் பல்வேறு நடவடிக்கையையடுத்து பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை பிற்பகல் 2 மணியளவில் சேத்துப்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு புறப்பட்டது.

Exit mobile version