கிருஷ்ணகிரி அருகே தென்பண்ணை ஆற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து தரைப்பாலம் அமைத்து கோதண்டராமர் சிலையை எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கடந்த டிசமபர் மாதம் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கோதண்ட ராமர் சிலை பெங்களூருவிற்கு லாரி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. கிட்டத்தட்ட 6 மாதம் ஆகியுள்ள நிலையில் சிலையானது இன்னும் தமிழக எல்லையை தாண்டவில்லை. சிலையானது மிகப்பிரமாண்டமாக இருப்பதால் , ஏராளமான தடைகளை வழி நெடுக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த 8 நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் திடீரென தண்ணீர் வந்ததால் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து ஆற்றில் தற்காலிக பாலம் அமைக்கும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாலம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெறுவதால் இப்பணி முடிவடைந்தவுடன் சிலையானது பெங்களூருவை நோக்கி புறப்பட உள்ளது