சிவகங்கையில் பிரம்மாண்ட பலூன் திருவிழா தொடக்கம்

சிவகங்கையில் பிரம்மாண்டமான பலூன் திருவிழாவைக் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் தொடக்கி வைத்தார்.

சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில் பிரம்மாண்டமான பலூன் திருவிழா துவங்கியுள்ளது. இதனைக் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். மிகப் பிரமாண்ட பலூனை இயக்கி வானில் பயணிக்கும் முறைகள் குறித்துச் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பலூன்களில் சாகசப் பயணம் செய்யும் பயிற்சி மற்றும் நவீன விமானக் கண்காட்சி ஆகியவற்றில் 100க்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Exit mobile version