ஹவாய் ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் கூகுளை பயன்படுத்த முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா- சீன இடையே நடந்து வரும் வர்த்தகப்போரை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன தயாரிப்பான ஹவாய் ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பொருட்களை தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் ஹவாய் நிறுவனத்துடன் அனைத்து விதமான வியாபார ஒப்பந்தங்கள், சேவைகளை நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஹவாய் மொபைலை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஹவாய்க்கு கூகுள் வழங்கிய ஹார்டுவேர், சாப்ட்வேர் உரிமங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
ஆனால் ஏற்கனவே ஹவாய் போன் வைத்திருப்பவர்கள் கூகுள் அப்ளிகேஷன்களையும்,அதன் அப்டேட்களையும் பயன்படுத்தலாம். புதிதாக வாங்குபவர்கள் கூகுள் அப்ளிகேஷன்களையும், கூகுள் பிளே கேம் போன்றவற்றை பயன்படுத்த முடியாது என கூறியுள்ளது.