கொரோனா அச்சத்தில் இருந்து மீள்வது எப்படி…? – வழிகாட்டும் மருத்துவர்கள்

கொரொனா காலகட்டத்தில் மனதுக்குப் பிடித்தமான மாற்று வேலைகளை செய்தால் தேவையில்லாமல் ஏற்படக்கூடிய பயம், மன அழுத்தம் ஆகியற்றை தவிர்க்கலாம் என உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் பயத்தை போக்குவது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம்……

கொரொனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் அவர்களை ஒருவித மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தி விடுகிறது. எனவே தேவையில்லாத பயம், பதற்றம், கவலை இந்த காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். கொரொனா குறித்த விழிப்புணர்வு எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு அது குறித்த அதீதமான செய்திகள் மற்றும் அது பற்றிய அதீதமான சிந்தனைகள் ஆகியவற்றை குறைத்து கொள்வது அவசியம் என்கிறது மருத்துவ உலகம்.

கொரொனா தொடர்பான அடிப்படை தேவையான தகவல்களை மட்டும் அறிந்து கொண்டால் மட்டும் போதும். தேவையற்ற வீடியோ, தகவல்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நண்பர்களுடன் அலைபேசியில் பேசுவது மன இறுக்கத்தையும் பதற்றத்தையும் குறைக்கும் என கூறும் மருத்துவர்கள், தினமும் உடற்பயிற்சி என்பது அவசியம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முட்டை போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் மற்றும் மனம் அதிக வலிமையுடன் இருக்கும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். 

Exit mobile version