நாட்டில் அவ்வப்போது ஏற்படும் ரயில் விபத்தை எப்படி தடுப்பது என்பது பற்றி இன்ஜினியர் ஜெயபாரதி கூறியுள்ளார் . சென்னையில் பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் குறிப்பிடகையில் .
இந்தியாவில் அடிக்கடி இது போன்ற ரயில் விபத்துகள் ஏற்படுவது என்னை மிகவும் கடுமையாக பாதித்திருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தின் காரணமாக பலபேர் உயிரிழந்தார்கள், பல பேர் படுகாயமுற்று பலத்த சேதம் அடைந்தனர். இந்த நிலையில் அது போன்று கோர விபத்தை தடுப்பதற்கு நான் புதிய வகை டிவைஸ் எனப்படக்கூடிய கவாசம் என்ற ஒரு அறிய வகை டிவைஸ்சை ஒன்றை கடும் முயற்சி செய்து கண்டுபிடித்து உள்ளேன்.
இந்த புதிய வகை கண்டுபிடிப்பு பற்றி பலமுறை மத்திய ரயில்வே துறை அமைச்சர்களிடம் கடிதம் மூலமாகவும் தான் கண்டுபிடித்தது பற்றி விளக்கம் அளித்தும் அவர்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை என தெரிவித்த ஜெயபாரதி, கடந்த 2005 ஆம் ஆண்டு நான் கண்டுபிடித்த புதிய வகை ஒயர் டிவைஸ் பற்றி அரசிடம் விளக்கம் அளித்து காண்பித்தேன். ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக பல மாநிலங்களில் இது போன்ற ரயில் விபத்துகள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. பல உயிர்கள் போய்க்கொண்டு தான் இருக்கின்றன. இது என்னால் பார்த்துக்கொண்டு பொறுத்துக் கொள்ள முடியவில்லை . பல நாள் காத்திருப்புக்கு பின் கடந்த 2016 ஆம் ஆண்டு பேட்டன் அடிப்படையில் என்னிடம் விளக்கம் கேட்ட ரயில்வே அதிகாரிகளிடம் நான் புதிய வகை டிவைஸ் காண்பித்து அதற்கான விளக்கத்தை அளித்தேன் ஆனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன .
தற்பொழுது ஒடிசா போற ரயில் விபத்துக்கு பிறகு புதிய வகை கவாம்சம் என்கிற டிவைஸ் மூலம் ரயில் விபத்தை எப்படி தடுப்பது என்பதை பற்றி ஒரு டிவைஸ் கண்டுபிடித்துள்ளேன் இதை நாட்டுக்கு நான் அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்த ஜெயபாரதி, நான் கண்டுபிடித்த புதிய வகை ஒயர் டிவைஸ் தண்டவாளங்களில் பொருத்தினால் பெருமளவு விபத்தை தடுக்கலாம். நான் இதைப்பற்றி ஏற்கனவே மத்திய அரசிடம் விரிவாக விளக்கம் அளித்து இருக்கிறேன் இதற்கு ஊழியர்கள் தேவையில்லை ரயில்வே பணியாளர்கள் தேவையில்லை அதே போன்று ஒரு ஒயர் மூலமாக ஆட்டோமேட்டிக் எலக்ட்ரானிக் டிவைஸ் அமைத்து எதிரே வரக்கூடியது ரயிலை முன்கூட்டியே அறியலாம் .
பெருமளவு ரயில் விபத்தை தடுப்பதற்கான முழு ஏற்பாடுகளையும் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.சோதனை அடிப்படையில் இதனை பரிசோதனை செய்தால் நிச்சயம் நல்லதொரு மாற்றம் வரும் என நாங்கள் நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்கள் .
இதை சோதனை செய்வதற்காக ரயில்வே, துறையும் மத்திய அரசும் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைப்பதாக தெரிவித்தனர், என்று தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டார்.
Discussion about this post