கொரோனா 3-ம் அலையை தடுப்பது எப்படி?

கொரோனாவின் இன்றைய நிலையைக் கடப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

 

 

தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை என்பது கண் துடைப்பான ஒன்றுதான் என பலரும் முணுமுணுக்கும் சூழலை காண முடிகிறது. ஆர்.டி.பி.சி.ஆர் உள்ளிட்ட கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளாதவர்களால் தொற்று பாதிப்பு என்பது பலமடங்கு அதிகரித்து உள்ளது என்று அதிர்ச்சித் தகவலை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், அரசின் நடவடிக்கைகள் மட்டுமே தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்காது. அவசர நிலையை உணர்ந்து ஓவ்வொருவரும், முகக்கவசம் அணிவதும், மற்றவரை விட்டு விலகி இருப்பதும், தேவையின்றி வெளியில் சுற்றாமல் இருப்பதும்தான் நம்மை பாதுகாக்கும் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கை.

 

மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே, கொரோனாவின் மூன்றாம் அலையை ஏற்படுத்தாமல் நம்மைப் பாதுகாக்கும் வழிமுறை என்பதில் உறுதிகாட்டும் மருத்துவர்கள், இதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

உருமாற்றம் அடைந்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்று சுனாமியாக நம்மை வேட்டையாடி வரும் சூழலில், அரசு முழு ஊரடங்கை அறிவிப்பது மட்டுமல்ல, நாமும் வீட்டில் தனித்திருப்பதும், தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை காக்கும்.

Exit mobile version