கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், முகக்கவசமே உயிர்காக்கும் கவசம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எந்த வகையான முகக்கவசத்தை நாம் அணியவேண்டும் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு
கொரோனாவுக்கு எதிரான முதல் ஆயுதம் நமது முகக் கவசம்தான். காற்றில் தவழும் வைரஸ் நம் உடலைத் தழுவாமல் காப்பதில், முதல் பங்கு வகிப்பவை அவைதான்.
முகக்கவசங்கள், N95 முகக் கவசம், துணியாலான முகக் கவசம், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் Triple layer முகக் கவசம் என பல வகையாக உள்ளது.
துணிக் கவசம் அல்லது Triple layer கவசம் 50 சதவீதம் வைரஸ்களை மட்டுமே தடுக்கும். இதில் பலர், 2 triple layer கவசத்தையோ, துணி கவசத்தின் மேல் Triple layer கவசத்தையோ என இரண்டு முக கவசங்களை அணிகின்றனர். இதன் மூலம் 80% கிருமிகளில் இருந்து மட்டுமே நம்மை பாதுகாக்கும்.
இதில், N95 முகக்கவசங்கள் கொரோனா வைரஸை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காற்றில் 100 வைரஸ்கள் இருந்தால் 95 வைரஸ்களை இது நமது உடலுக்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது.
இந்த N95 முகக் கவசத்தை 4 தடவை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். அதன்படி, ஒரு மாதத்துக்கு ஆறு N95 முகக்கவசங்களை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
சூழ்ந்துள்ள தொற்று ஆபத்துகளின் முதன்மைக் காப்பாளனான முகக் கவசங்களை சரியாகத் தேர்வு செய்து, நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் காப்போம்.
நியூஸ் ஜெ. செய்திகளுக்காக செய்தியாளர் குணா…