சுட்டெரிக்கும் வெயிலை கணக்கிடுவது எப்படி?

மழை குறித்தும் அதன் அளவீடுகள் பற்றியும் பலவிதமாக அறிந்துள்ள நாம், வெயிலின் தாக்கம் என்ன? அது எதன் அடிப்படையில் அளவீடு செய்யப்படுகிறது என்பதை அறியாமல் கடந்து செல்கின்றோம்.

அதனை வெயிலோடு விளையாடும் நிழலாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

 

தமிழக நிலவியலின் அமைப்பு படி ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக காணப்படுகின்றது.  குறிப்பிட்ட இந்த மாதங்களில் மட்டும் கோடை வெப்பத்தின் தாக்கம், 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை உணரப்படுவது வழக்கம்.

ஆனால் பொதுமக்களை மிரட்டுவது கத்திரி என்ற சொல் தான். அது என்ன கத்திரி வெயில், இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசனிடம் கேள்வி எழுப்பினால், இதோ அவரது பதில்..

காற்றின் வெப்பநிலை, ஈரப்பதத்தை வைத்து தான் வெப்பநிலை கண்டறியப்படுவதாக விளக்கமளிக்கும் அவர், தற்போது கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதமானது 50ல் இருந்து 90 விழுக்காடு வரை உள்ளதாக குறிப்பிடுகிறார்.

இதனால், காற்றில் ஈரப்பதம் 50 விழுக்காடுக்கு மேல் செல்லும்போது, குறைந்தளவு வெப்பநிலையே இருந்தாலும் 42 டிகிரி வெப்பநிலை இருப்பது போல உணர வைப்பதாகவும், இரவு நேரங்களில் வரும் வியர்வை ஆவியாகாமல் உடலிலே தங்கி விடுவதால், அதிக வெப்பநிலை உள்ளதை போல தோன்றுவதாகவும் விளக்கமளிக்கிறார் புவியரசன்.

Maximum, Minimum, Dry bulp, Wet bulp என்ற நான்கு அளவுகோள்கள் மூலம் வெப்பநிலை அளவிடப்படுகிறது.

இதில் Maximum என்ற அளவுகோளில் மட்டும் காலை 8.30 மணியளில் Alcohol நிரப்பப் பட்டு, மாலை 5.30 மணிவரை வெப்பநிலை அளவிடப்படும். மேலும் காற்றில் உள்ள வெப்பநிலை, ஈரப்பதம் இரண்டும் தனித் தனியே கிராப் பேப்பர் மூலமாக, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அளவுகள் குறிக்கப்பட்டு இதன் மூலம் வெப்பநிலை மாற்றம் கணிக்கப்படுகிறது.

வெயில் நேரத்தில் வியர்வை மூலம் அதிகளவில் உடலில் இருந்து உப்பு வெளியேறுவதால், பழங்கள், இளநீர், நீர் ஆகாரங்கள் அதிகளவில் உட்கொள்ளலாம் என்பதோடு, நண்பகல் நேரங்களில் வெளியே செல்லாமல் இருப்பதே ஆரோக்கியமானதாகும்.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் அஜித்துடன் செய்தியாளர் பவித்ரா.

Exit mobile version