ராகுல் காந்தியின் மூன்று நாட்டு குடியுரிமை – விளக்கங்கள் என்ன ?

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளால் பிரதமர் வேட்பாளராகக் கூறப்படுபவருமான ராகுல் காந்தி இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் குடியுரிமை வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார்.

இப்போது ராகுல் காந்தியின் இங்கிலாந்துக் குடியுரிமை குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது, இது போலவே அவரது இத்தாலியக் குடியுரிமையும் முன்பு விமர்சனங்களுக்கு ஆளானது.

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ராகுல் காந்தி குறித்து ஒரு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில்,

‘இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் என்ற நிறுவனத்தில் ராகுல்காந்தி நிறுவன இயக்குநர்களில் ஒருவராகவும், செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் நிறுவனத்தின் ரிட்டர்ன் தாக்கல் செய்தபோது தனது பிரந்தநாள் ஜூன் 19, 1970 என்றும், தான் ஒரு இங்கிலாந்து குடிமகன் என்றும் குறிப்பிட்டு உள்ளார். அதனால் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து விசாரிக்க வேண்டும்’ – என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பான ஆவணங்களையும், அந்த பேக்காப்ஸ் நிறுவனத்தின் முகவரியையும் தனது புகாருடன் அவர் இணைத்து இருந்தார்.

இந்தப் புகாருக்கு அடுத்த 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அமைச்சர் பி.சி.ஜோஷி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

முன்னதாகக் கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் பாஸ்டன் விமான நிலையத்தில் ராகுல் காந்தி பரிசோதனைகளில் சிக்கியபோது, அவரது இத்தாலிய பாஸ்போர்ட்டில் அவரோட பேரு ‘ராகுல் வின்சி’ என்று இருந்தது கடும் சர்ச்சைகளை உருவாக்கியது.

இத்தாலியில பிறந்தவர்கள் தங்கள் சொந்த ஊரின் பெயரைத் தங்கள் பெயரில் இணைப்பது வழக்கம். வின்சி – என்பது ஒரு இத்தாலிய ஊர். அங்கு பிறந்ததனால்தான் மோனலிசாவை வரைந்த ஓவியர் ‘லியனார்டோ’ பின்னர் ‘லியனார்டோ டா வின்சி’ ஆனார். அதே வின்சிதான் ராகுல் காந்தியின் பூர்வீகமும். அதனால் அவருடைய இத்தாலியப் பெயர் ‘ராகுல் வின்சி’. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துல படித்த பொழுதும் அவரது பேரு ‘ராகுல் வின்சி’தான் என்பதும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

1991ல் ராஜீவ் காந்தி மறைந்த பின்னர், 1992ஆம் ஆண்டு சோனியா காந்தி தனது இத்தாலியக் குடியுரிமையை புதுப்பித்தார், அதனால் ராகுலுக்கும் இயல்பாகவே இத்தாலியக் குடியுரிமையும், இத்தாலியப் பெயரும் கிடைத்தது இதன் காரணமாக உள்ளது.

இத்தாலியப் பெயர், இங்கிலாந்தில் பணி, இந்தியாவில் அரசியல் – என்ற ராகுல் காந்தியின் மூன்று முகங்கள் இந்திய மக்கள் அவரைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காததற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மண்ணின் மக்களே நாட்டை ஆள வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

இந்தக் குடியுரிமைகளுக்கு ராகுல் காந்தி சில விளக்கங்களைக் கொடுக்கலாம், ஆனால் அதை நியாயப்படுத்தவே முடியாது என்பதுதான் உண்மை.

Exit mobile version