இந்தாண்டுக்குள் எத்தனை அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காவூர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஆலங்குளம் அதிமுக உறுப்பினர் மனோஜ் பாண்டியன் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்க எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தரம் உயர்த்தப்படவுள்ள பள்ளிகள் குறித்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் தரம் உயர்த்தப்படவுள்ள பள்ளிகளின் நிலை குறித்து அரசு சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பதிலளிக்காமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.