எத்தன நாள் தான் நானும் சிங்கிளாவே இருக்கிறது?

” i am single and i am young ” இப்படினு ஸ்டேட்டஸ் வச்சிக்கிட்டு , ஒரு முரட்டு சிங்கிள்னு சொல்லிகிட்டு திரியுற பல இளைஞர்கள் இன்று என்ன மனநிலையில் இருப்பார்கள் தெரியுமா?

பலகோடி வாழும் மக்கள் இடத்தில் என்னதான் முரட்டு சிங்கள்னு சொல்லிட்டு திரிஞ்சாலும் தனக்கென ஒரு காதலியை அல்லது காதலனை கண்டுபிடிக்க முடியலையே என்ற வருத்தம் அவருக்குள் அதிகமாகவே இருக்கும். இந்த சிங்கிள்னு சொல்றவங்க லிஸ்ட்ல காதலால் பாதிக்கப்பட்டவர்கள்,காதலிக்க முயற்சி செய்யாதவர்கள், விருப்பமில்லாதவர்கள் என ஒரு கூட்டமே இருக்கிறார்கள். இதில் அதிகமானோர் அடுத்தவர் சொல்வதை கேட்டு சிங்கள் தான் கெத்துன்னு நம்புறவங்க.

பொது இடங்களில் காதல் ஜோடிகளை பார்த்து கவலைப்படும் சிங்கிள் தான் அதிகம். அவர்கள் அப்படி ஆகவில்லை அப்படி ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நட்பு வட்டாரம் தான். இதை புரிந்தால் அவர்கள் சிங்கள் கெத்துனு சொல்ல மாட்டார்கள். எப்படின்னு கேட்டிங்கன்னா, ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ஒரு ஃபீலிங் இருக்கும். அதை மத்தவங்களுக்காக கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். அதை தப்புன்னு சொல்லல . ஆனால் அதையெல்லாம் வச்சிக்கிட்டு சிங்கள் தான் கெத்துன்னு மட்டும் சொல்லாதீங்க.

சில பேருக்கு யார்மேலயாது காதல் அல்லது மனசுக்கு பிடித்த பொண்ணு இருப்பார்கள். அதை அவங்க எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியாமலும் இருக்கலாம். இதனால் கூட சிங்களா இருக்காங்கன்னு சொல்லலாம். மொத்தத்தில் மன வேதனையை மறைக்கும் மந்திரமாக சிங்கிள் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

இன்னும் சிலபேர் தங்களோட சொந்த காரணங்களுக்காக இந்த லவ்வுன்னு எந்த கம்மிட்மெண்ட்டும் இல்லாம இருப்பாங்க.

இந்த லிஸ்ட்ல காதலிக்க யாருமே இல்லன்னு சொல்றவங்களை விட்டுறலாம். ஆனால் அவங்களும் காதல் உலகத்துல சீக்கிரம் நுழைவீங்கன்னு நம்புறோம்.

எந்த நாள் காதலை சொல்றீங்கன்னு முக்கியம் இல்ல. நீங்க சொல்றீங்களான்னுத்தான் முக்கியம்.

Exit mobile version