டெகல்கா பத்திரிகை பெரிய பதவிகளில் உள்ளவர்களை பிளாக்மெயில் செய்து செய்திகள் வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை குற்றம்சாட்டி உள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது திட்டமிட்டு வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக தெரிவித்த அவர், இதன் பின்னணியில் திமுக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கொடநாடு சம்பவ குற்றவாளிகளுடன் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் வழக்கின் விபரங்கள் அவருக்கு எப்படி தெரிந்தது என்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, குற்றவாளி கனகராஜ், சயனை தொடர்பு கொண்டு, கொடநாடு சம்பவத்திற்கு திட்டமிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.