உலக முதலீட்டாளர்களை இந்தியா ஈர்ப்பது எப்படி?

கொரோனாவால் உலகப்பொருளாதாரமே கடுமையான விளைவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியா மட்டும் உலக முதலீட்டாளர்களை தன் வசப்படுத்திக் கொண்டு முன்னேற்றப்பாதையில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது…

 

3 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் லாக்டவுனால் உலக பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது கொரோனா… இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல… ஆனால், விதியை மதியால் வென்று உலக முதலீட்டாளர்களை கவர பல முயற்சிகளை எடுத்து வருகிறது இந்தியா..

தனியார் பங்களிப்பு அதிகரிப்பு, இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகள் என்ற பல திட்டங்களும் உலக தொழில் முதலீட்டாளர்களை இந்தியாவின் பக்கம் ஈர்க்க காரணமாக அமைந்துள்ளது. டிஜிட்டல் உலகின் பெரிய ஜாம்பவான் ஆன கூகுள், இந்தியாவில் 75 ஆயிரம்கோடி ரூபாயை முதலீடு செய்ய முன்வந்துள்ளதே இதற்கு பெரும் உதாரணம்…

இதுபோல கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் மட்டும் உலகின் 15 முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்வரை முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றன..

குறிப்பாக, அமெரிக்க நிறுவனங்களான பேஸ்புக், வால்மார்ட், ஃபாக்ஸ்கான், Qualcomm, தென் கொரிய நிறுவனங்களான Kia Motors, சாம்சாங், Hyundai, ஜப்பானிய நிறுவனமான Hitachi, சுசூகி, போன்றவை இந்தியாவில் முதலீடு செய்ய தீர்மானித்திருப்பது உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது… அதிலும் குறிப்பாக சுமார் 18 ஆயிரத்து 236 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்வது இன்னும் கூடுதல் சிறப்பு…

இந்த முதலீடுகளால் இந்தியாவின் கோடிக்கணக்கான இளைஞர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைவது மட்டுமின்றி, இந்திய பொருளாதாரமும் வெகுவிரைவில் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version