135 அடி உயரதில் உலகை திரும்ப செய்தவர் தான் பீட்டர் டிங்க்லேஜ். இலக்கை அடைய உயரம் ஒரு தடை இல்லை எனறு நிருப்பித்து காட்டியவர்களில் இவரும் ஒருவர். ஜுன் 11 1969 ல் பிறந்த இவர் வளர்ச்சி குன்றியவராக காணப்பட்டார். இவருடைய இளமை காலமோ ஏமாற்றமும், கவலையும் நிறைந்ததாகவே இருந்தது. தன் வழ்க்கையை தொடக்கப் பள்ளி ஆசிரியராக தொடங்கினார், பின்னர் ”இன்சூரன்ஸ் சேல்ஸ்மேன்” ஆக மாறினார். ஆனால் பீட்டர் டிங்க்லேஜ்க்கு திரை துரையில் சாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ”முடியாது, நடக்காது – உன் உயரத்தை சற்று திரும்பிப்பார்” என்று பலரும் கூற இவரோ தனது கனவை நோக்கி முதல் அடி எடுத்து வைத்தார்.
1991ஆம் ஆண்டு பீட்டர் டின்கிலேஜ் பெனிங்டன் கல்லூரியில் நடிப்பதைப் பற்றி படித்து பட்டம் பெற்றார். அங்கு பல மேடை நாடகங்களை தயாரித்துள்ளார். தனக்கான இடம் இது இல்லை என தெரிந்துகொண்ட அவர் அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டர். தன் நண்பர்களுடன் இணைந்து ”Theatre group” என்ற கம்பெனியை ஆரம்பித்து தன் கனவை தொடர்ந்தார். ஆனால் அதில் அவர் தோல்வியை மட்டும் சந்தித்தார்.அதனால் அங்கிருந்து வெளிய வந்த அவர், கிடைத்த வேலையை செய்து தனது உணவு மற்றும் தங்கும் செலுவுகளை சமாளித்தார்.
எந்த நிலைமையிலும் தான் ஒரு நடிகனாக வர வேண்டும் என்பதில் மட்டும் அவர் பின்வாங்கவில்லலை. கிடைக்கும் நேரங்களில் பல கம்பனிகளில் ஏறி இறங்கினார், அவரிடம் பல திறமைகள் இருந்தும் அவரின் உடல் வளர்ச்சி காரணமாக பல கம்பெனியிடம் நிராகரிக்கப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார். 4 வருட போராட்டத்துக்கு பின்னர் 1995இல் ”லிவிங் இன் ஆப்லீயன்” என்ற படத்தின் மூலம் முதன் முதலாக திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். அன்றிலிருந்து அவருடைய கனவு பலிக்க ஆரம்பித்தது.
அதன் பின்னர் 2003ம் ஆண்டு வந்த ”தி ஸ்டேஷன் ஏஜெண்ட்” என்ற நகைச்சுவைத் திரைப்படத்திற்குப் பிறகு புகழ் பெற்ற நடிகரானார். ”எல்ஃப் (2003), பைன்ட் மி கில்லிடி (2006), அண்டர்டாக் (2007), பெனெலோப் (2008), டெத் அட் எ பர்னல் (2007), த குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா: பிரின்ஸ் காஸ்பியன் (2008), எக்ஸ்-மென்: டேஸ் ஆப் பியூச்சர் பாஸ்ட் (2014) மற்றும் மூன்று பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி (2017)” போன்ற திரைப்படங்களில் குறிப்பிடத் தக்க கதாப்பாத்திரங்களில் நடித்து அவரது வெற்றி பயணத்தை தொடர்ந்தார். 2011ம் ஆண்டு HBO சேனலில் “கேம் ஆப் திரோன்ஸ்” என்ற சீரிஸில் நடிக்கத் தொடங்கினார். அந்த தொடர் மூலம் அவருடைய நடிப்பு, நகைச்சுவை மற்றும் விசித்திரமான செயல் மூலம் உலக மக்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகரில் ஒருவராக திகழ்கிறார் பீட்டர் டிங்க்லேஜ். அதுமட்டுமில்லாமல் இன்று வரை பல நடிகர்களுடைய கனவாக திகழும் பிரைம்டைம் எம்மி விருதுக்கு தொடர்ச்சியாக ஏழு முறை பரிந்துரை செய்யப்பட்டு, மூன்று முறை விருதினை வென்றுள்ளார். 2012 ல் தொலைக்காட்சி தொடருக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றார். தன்னிடம் உள்ள குறைகளை மறந்து சாதித்து காட்டினார் நடிகர் பீட்டர் டிங்க்லேஜ்.
தன் விடா முயற்சியால் சாதித்து காட்டிய பீட்டர் டிங்க்லேஜ்க்கு இன்று பிறந்தநாள்!