ஸ்டூவர்ட் கதாபாத்திரத்துக்கு தகுந்தார் போல அரியலூர் அருகே தனித்துவிடப்பட்ட 3 அணில் குட்டிகள் , தனக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டில் செல்ல பிள்ளையாக வலம் வருகிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஐசக், இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள ஆலமரத்திலிருந்து மூன்று அணில் குட்டி தவறி கீழே விழுந்ததைக் கண்ட அவர், கையில் எடுத்து அதற்கு பால் பழங்களை கொடுத்துள்ளார். அணில் குட்டிகளை அப்படியே விட்டு விடுவதா என எண்ணிய ஐசக் , அணில் குட்டிகளை தன்னுடன் வீட்டில் வைத்து வளர்க்க ஆரமித்துள்ளார்.
பின்னர் 3 மாதங்களுக்கு பிறகு அந்த அணில்களை சுதந்திரமாக வெளியே விட்டுள்ளார் ஐசக், ஆனால் அணில்கள் டொடர்ந்து அவரது வீட்டிற்குத் வரத் தொடங்கியது. ‘ஸ்டுவர்ட்’ என்று ஐசக் குரல் கொடுத்தால் போதும் எங்கிருந்தாலும், அந்த அணில் ஓடிவந்து அவர்களுடன் சர்வ சாதாரணமாக விளையாடுகிறது.
அவர்களின் குழந்தைகளில் ஒருவர்போல அவர்களின் தலை மீதும், தோல் மீதும் துருதுருவென அணில் ஓடி விளையாடுகிறது. அதற்கு உணவாகத் தினமும் திராட்சை, கொய்யா, தேங்காய், ஆப்பிள் என பல வகைகள் திண்பண்டங்களை கொடுகின்றனர். சின்னஞ்சிறு உயிரினமான அணில் குட்டியிடம் அன்பைக் கொடுத்து, அதன் சேட்டைகள் மூலம் மகிழ்ச்சியைப் பெறுகிறோம் என ஐசக் குடும்பத்தினர் கூறுகின்றனர். தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது இந்த அணில் குட்டிகள் என அக்குடும்பத்தினர் பெருமையாக கூறுகின்றனர்.