ஊரடங்கு காலத்தில் உணவகங்களில் பார்சல் வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரத்தில், இயங்கி வரும் 722 சிறிய மற்றும் பெரிய உணவகங்களில் இருக்கைகளில் அமர்ந்து மக்கள் உணவு உண்ண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. 50 சதவீத ஊழியர்களை கொண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.