மாமா… டவுசர் கழண்டுச்சு…. சபலத்தால் கெட்ட ஹோட்டல்கார்…

ஈரோடு அருகே, உல்லாசமாக இருக்க அழைப்பு விடுத்த உணவக உரிமையாளருக்கு, ஓகே சொல்வது போல் தனிமையில் அழைத்துச் சென்று, பாக்கெட்டை பாதம் பார்த்த மாஸ்டர் பிளான் மாதரசியை, போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் சுமித். திருமணமான இவருக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தனது ஹோட்டலுக்கு ரெகுலராக சாப்பிட வரும் பேபி என்ற பெண்ணை, தினம் தினம் பார்வையாலேயே சாப்பிட்டு வந்துள்ளார் சுமித்.

பேபியிடம் இருந்த ஏதோ ஒன்று, சுமித்தை ஹெவியாக லைக் பண்ண வைக்க, ஒரு நன்னாளில் தனது காதல் மூட்டையை அவிழ்த்து அவர் காலடியில் கொட்டியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக, பேபிக்கு ஒரே ஒரு முறை மட்டும் திருமணமாகி விட்டதால், ஹோட்டல்காரின் காதலை ஏற்க முதலில் அவர் தயங்கியுள்ளார்.

ஆனால், மாவுக்கு பழக்கும் தோசைக்கல் மாதிரி, அவர் மனதை மெல்ல மெல்ல வழிக்கு கொண்டு வந்த ஹோட்டல்கார், பேபியின் மொபைல் எண்ணை வாங்கி மோகம் வளர்த்து, வெற்றிகரமாக மோட்டர் ரூம் சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தார்.

தனது காதல் வித்தையால் பேபியை வளைத்து போட்டு விட்டதாக எண்ணி, காலரை தூக்கி விட்ட படி மோட்டர் ரூமூக்கு ராஜ நடை போட்ட சுமித்திற்கு, அங்குதான் பெரிய ஷாக் காத்திருந்தது. ஆம்….அவர் நினைத்ததை போல உணவகத்திற்கு வந்த பேபியை காதல் வித்தை காட்டி சுமித் வழிக்கு கொண்டு வரவில்லை. பேபி எனும் மாஸ்டர் பிளான் மாதரசிதான் சுமித்திற்கு ஸ்கெச் போட்டு தினமும் அவரது ஹோட்டலுக்கு சாப்பிட சென்று, அவரை வலையில் வீழ்த்தியுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சுமித் உறைந்து போன நிலையில், பேபி கதவருகே சென்று விசில் அடித்து யாருக்கோ செய்கை காட்டியுள்ளார். இதையடுத்து திடு திடுவென வீட்டிற்குள் புகுந்த 4 பேர், சுமித்தை தூக்கிச் சென்று, வெளியில் உள்ள மரத்தில் கட்டி வைத்து, ஒரு லட்சம் தருமாறு மிரட்டி அடித்து துவைத்துள்ளனர்.

இதனிடையே சுமித் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பதற்றம் அடைந்த அவரது மனைவி, இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தோட்டத்தில் துவைத்து காயப்போடப் பட்டிருந்த சுமித்தை மீட்டு, மருத்துவனையில் அனுமதித்தனர். பேபி உள்ளிட்ட அவரது ஆண் நண்பர்களையும் கைது செய்து, கம்பி அறைக்கு அனுப்பி வைத்தனர்.

”ஹோட்டல் கார் கதையின் நீதி யாதெனில்,
மனைவி இருக்க பேபி கவர்தற்று…. ”

Exit mobile version