நியூயார்க்கில் Hot Dog உண்ணும் போட்டி

நியூயார்க் நகரில் Hot Dog என்று சொல்லப்படும் இறைச்சிக் கலவையால் ஆன உணவினை உண்ணும் போட்டி நடைபெற்றது. நியூயார்க்கில் உள்ள கோனி தீவில், வருடந்தோறும் ஜூலை 4ம் தேதி Hot Dog உண்ணும் போட்டி நடைபெறும். கோழி, மாடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சிக் கலவையால் ஆன உணவே Hot Dog எனப்படும். 10 நிமிடங்களில் அதிக Hot Dog-கினை உண்ணும் நபர், போட்டியில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஜோய் செஸ்ட்னட் என்பவர், 10 நிமிடங்களில் 71 Hot Dog-கினை சாப்பிட்டு போட்டியில் முதல் இடம் பிடித்தார்.

Exit mobile version