மிகப்பெரிய தொழிற்வளர்ச்சி நகரமாக ஒசூர் உருவாகும் -அமைச்சர் எம்.சி.சம்பத்

ஒசூர் நகரை அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிற்வளர்ச்சி பெற்ற நகரமாக உருவாக்குவதே தமிழக அரசின் திட்டம் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பெங்களூவை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனம், 635 கோடி ரூபாய் மதிப்பில் ஒசூரில் தொழிற்சாலை தொடங்க உள்ளதாகவும், இதன் மூலம் 4 ஆயிரம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

Exit mobile version